கோலாலம்பூர், ஜூலை.13-
கடந்த வியாழக்கிழமை பண்டார் மஞ்சாலாரா, செகாம்புட்டில் அரசாங்க நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த உணவுக் கடைகளையும் கார் கழுவும் மையத்தையும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் இடித்து அகற்றியது. இந்தச் சிறப்பு நடவடிக்கையானது கோலாலம்பூர் நிலம், சுரங்க அலுவலகம், மலேசிய காவல்துறை, ஆயர் சிலாங்கூர், தெனாகா நேஷனல் பெர்ஹாட் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்களுக்கு எதிராக டிபிகேஎல் வழங்கிய நோட்டீஸ்களுக்குப் பிறகு, வியாபாரிகள் தாமாகவே முன்வந்து இடத்தைக் காலி செய்தனர். இந்த நடவடிக்கை மூலம், சட்டவிரோதமாக அரசாங்க நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் அல்லது அனுமதி இல்லாமல் கட்டமைப்புகளை உருவாக்குபவர்களுக்கு எதிராக தொடர் கண்காணிப்பும் கடுமையான நடவடிக்கைகளையும் டிபிகேஎல் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








