Jun 26, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை மாற்றும் விண்ணப்பம் ஜூன் 1 முதல் தொடக்கம்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை மாற்றும் விண்ணப்பம் ஜூன் 1 முதல் தொடக்கம்

Share:

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க, செல்லுபடியாகும் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள மலேசியர்கள் அதை மலேசிய ஓட்டுநர் உரிமமாக மாற்ற விண்ணப்பிக்கலாம் என சாலைப் போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே அறிவித்துள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட இந்த புதிய நடைமுறையின் கீழ், வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து, ஜேபிஜே அலுவலகங்களிலும், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளையில், வெளிநாடுகளில் வேலை, வசிப்பு அல்லது பிற தேவைகளுக்காகச் செல்லும் மலேசியர்களின் பயண வசதிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய விதிமுறைகளின் கீழ், வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை மலேசிய ஓட்டுநர் உரிமமாக மாற்றுவது குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மலேசிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பே வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் பெற்ற மலேசியர்கள், மலேசியா எனது இரண்டாம் வீடு என்ற MM2H திட்டத்தில் பங்கேற்பவர்கள் மற்றும் தூதரகப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த மாற்றத்திற்குத் தகுதி பெறுகின்றனர்.

Related News

லாபுவான் விமான நிலைய  ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

லாபுவான் விமான நிலைய ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

ஜெலுத்தோங்  ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

ஜெலுத்தோங் ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் –  ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் – ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" –  ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" – ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்