முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் பொது மன்னிப்பு கோரிக்கையை பரிசீலிக்க, கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் கூடவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமால், இந்த முடிவானது அடுத்த கூட்டத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நஜிப்பின் மன்னிப்பு கோரிக்கை, நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாகவும், இந்த கோரிக்கை மட்டுமே நாளைய கூட்டத்தின் ஒரே நிகழ்ச்சி நிரலாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இது வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது.
73 வயதான நஜிப், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் முறைகேடு செய்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டவர். பின்னர் அவரது சிறைத்தண்டனை 6 ஆண்டுகளாகவும் அபராதம் 50 மில்லியனாகவும் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், நாளைய கூட்டத்தில் மாமன்னர் எடுக்கப் போகும் முடிவு குறித்து இப்போதே அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.








