கோலாலம்பூரில் சுமார் 49 ஹெக்டேர் பரப்பளவில் புதிய பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் பசுமைப் பகுதிகளை உருவாக்க கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் (DBKL) திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ இன்று வெளியிட்டுள்ள தகவலில், சுங்கை புனுஸ், கோலாம் ஆயர் பானாஸ் உள்ளிட்ட பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதுடன், அனைத்து வயதினருக்கும் ஏற்ற நடைபாதை, விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கோலாலம்பூரில் உள்ள திறந்தவெளி மற்றும் பசுமைப் பகுதிகளை சட்டப்பூர்வமாக பாதுகாக்கும் வகையில், இதுவரை 556 இடங்கள் அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் 200-க்கும் மேற்பட்ட இடங்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.








