ஈப்போ, சிம்பாங் பூலாய், ஜாலான் ஈப்போ-கோப்பேங் பகுதியில் மெர்சடீஸ் கார் ஓட்டுநர் ஒருவர் மரக்கட்டையைக் காட்டி மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தின் காட்சியானது திரேட்ஸ் சமூக ஊடகத்தில் பரவி வருகின்றது.
மாலை 4.56 மணியளவில் டொயோட்டா வியோஸ் கார் ஒன்று மெர்சடீஸ் காரை சாலையோரம் செல்லும் வகையில் வழிமறித்ததாகவும், ஓட்டுநர் ஹாரன் அடித்ததைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சிம்பாங் பூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் நஜிப் ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
பின்னர் வியோஸ் காரில் இருந்து இறங்கிய இருவரில் ஒருவர் மரக்கட்டையைக் காட்டி ஓட்டுநரின் சகோதரரை மிரட்டியதாகவும், சம்பவம் டேஷ்கேமில் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கானது குற்றவியல் சட்டம், 506-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.








