Sep 17, 2026
Thisaigal NewsYouTube
கோலா மூடாவில் 9 வீடுகளில் கொள்ளை... ‘மாட் டோக் கேங்’ கும்பல் சிக்கியது
தற்போதைய செய்திகள்

கோலா மூடாவில் 9 வீடுகளில் கொள்ளை... ‘மாட் டோக் கேங்’ கும்பல் சிக்கியது

Share:

கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோலா மூடா மாவட்டத்தில் வீடுகளில் கொள்ளையடித்து வந்ததாக கூறப்படும் ‘மாட் டோக் கேங்’ கும்பலின் தலைவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

28 முதல் 40 வயதுக்குட்பட்ட 4 பேரும் செப்டம்பர் 9-ஆம் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ‘ஓப் பிந்து/ஓப் லெஜாங்’ நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாமான் டெலிமா மற்றும் தாமான் அர்கேட் பகுதிகளில் 9 வீடுகளில் நடந்த கொள்ளைச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் இக்கும்பலுடன் தொடர்புடைய மேலும் 2 சந்தேக நபர்கள் தலைமறைவாக உள்ளனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்கள் இல்லாத வீடுகளை குறிவைக்கும் இக்கும்பல், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை திருடியதாகவும், அவர்களிடம் இருந்து ட்ரோன், மோட்டார் சைக்கிள், கேமரா, வாஷிங் மெஷின் மற்றும் 3 கைக்கடிகாரங்கள் உட்பட சுமார் 30 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வருக்கும் ஏற்கனவே போதைப்பொருள் மற்றும் குற்ற வழக்குகள் இருப்பதுடன், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related News