Nov 23, 2025
Thisaigal NewsYouTube
அத்துமீறிய கார் ஓட்டுநர் கைது: சாலைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை!
தற்போதைய செய்திகள்

அத்துமீறிய கார் ஓட்டுநர் கைது: சாலைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.23-

சுங்கை பீசி நெடுஞ்சாலையில் அலட்சியமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டி சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பகிரப்பட்டக் காணொளியில் இருந்த 32 வயது மதிக்கத்தக்க நபர் காவற்படையின் விசாரணையில் உள்ளார். அந்த ஓட்டுநர் இன்று காலை 10.30 மணியளவில் கோலாலம்பூர் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு வந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறையின் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஸம்சுரி முகமட் இசா கூறினார்.

ஓட்டுநரின் கூற்றுப்படி, சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கியதால் டயர் பஞ்சராகிவிட்டது என்றும், அவருடைய வீடு அருகாமையில் இருந்ததால் அவர் வாகனத்தை ஓட்டி வீட்டிற்குச் செல்ல முயன்றதாகவும் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை 8 மணியளவில் நிகழ்ந்ததாகவும், அந்த வாகனத்தை நிறுத்தி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் அவருக்கு அறிவுரை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 42(1)-இன் கீழ் க விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related News