Oct 16, 2026
Thisaigal NewsYouTube

இன்சுரன்ஸ் பணத்தை கோருவதற்கு நாடகமாடி நபர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இன்சுரன்ஸ் பணத்தை கோருவதற்கு நாடகமாடி நபர் கைது

ரெம்பாவ், டிச. 23-

இன்சுரன்ஸ் பணத்தை இழப்பீடாக கோருவதற்காக தனது விலை உயர்ந்த ஆடம்பரக் கார், கொள்ளைச் சம்பவத்தின் போது களவாடப்பட்டு விட்டதாக பொய்யான தகவலைகூறி, நாடகமாடிய பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபர் அளித்த போலீஸ் புகாரில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதை சந்தேகித்த போலீசார், அந்த நபரை துருவி, துருவி விசாரணை செய்த போது,அவர் அளித்த தகவல்களில் முன்னுக்குப்பின் முரண்பாடுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 42 வயதுடைய அந்த நபர், கைது செய்யப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான், ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஷேக் கடார் ஷேக் முகமட் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.22 மணியளவில் தம்மை மடக்கிய அடையாளம் தெரியாத நபர்கள், தம்முடைய உடமைகளையும், தமக்கு சொந்தான ஆவ்டி ரக காரையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டதாக அந்த நபர், கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.14 மணியளவில் போலீசில் புகார் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

தாங்கள் மேற்கொண்ட விசாரணையில் இன்சுரன்ஸ் பணத்தை கோருவதற்காக அவர் இந்த பித்தலாட்டத்தை நடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஷேக் கடார் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேபிள் திருட்டு முயற்சி: காஜாங் எம்ஆர்டி ரயில் சேவையில் பாதிப்பு

கேபிள் திருட்டு முயற்சி: காஜாங் எம்ஆர்டி ரயில் சேவையில் பாதிப்பு

பெண் சுங்கத் துறை அதிகாரி மரணம் - கணவர் போலீசில் சரண்

பெண் சுங்கத் துறை அதிகாரி மரணம் - கணவர் போலீசில் சரண்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை