Sep 18, 2026
Thisaigal NewsYouTube
மின்சாரக் கட்டணத்தில் மாதம் 47 ரிங்கிட் வரை சேமிப்பு – டிஎன்பி
தற்போதைய செய்திகள்

மின்சாரக் கட்டணத்தில் மாதம் 47 ரிங்கிட் வரை சேமிப்பு – டிஎன்பி

Share:

அடுத்த மாதம் முதல், மின்சாரத்தைப் பயன்படுத்தும் குடும்பங்கள் மாதாந்திரக் கட்டணத்தில் அதிகபட்சம் 47 ரிங்கிட் அல்லது கிட்டத்தட்ட 13 விழுக்காடு வரை சேமிக்கலாம் என்று தெனாகா நேஷனல் பெர்ஹாட்டான டிஎன்பி தெரிவித்துள்ளது.

மின்சாரப் பாதுகாப்பு வரம்பு 600 கிலோவாட்-மணி என்பதிலிருந்து 800 கிலோவாட்-மணியாக உயர்த்தப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

இதன்படி, 601 கிலோவாட்-மணி, பயன்படுத்துவோரின் கட்டணம் 258 ரிங்கிட் 40 சென்னிலிருந்து 225 ரிங்கிட் 50 சென்னாகக் குறைந்து, 32 ரிங்கிட் 90 சென் சேமிக்கலாம்.

650 கிலோவாட்-மணிக்கு 36 ரிங்கிட் 30 சென்னும், 700 கிலோவாட்-மணிக்கு 39 ரிங்கிட் 90 சென்னும் சேமிக்க முடியும்.

750 கிலோவாட்-மணிக்கு 43 ரிங்கிட் 55 சென் சேமிக்கலாம்.

புதிய பாதுகாப்பு வரம்பின் அதிகபட்சமான 800 கிலோவாட்-மணி பயன்படுத்துவோருக்கு, கட்டணம் 375 ரிங்கிட் 85 சென்னிலிருந்து 328 ரிங்கிட் 60 சென்னாகக் குறையும். இதன் மூலம் மாதம் 47 ரிங்கிட் 25 சென் வரை சேமிக்கலாம் என்று டிஎன்பி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News