பத்து பஹாட், ஸ்ரீ காடிங்கில் தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின் போது 29 வயது பெண்ணிடம் ஆபாசமான மற்றும் அவமதிக்கும் வகையில் கை சைகை செய்ததாகக் கூறப்படும் ஒப்பந்தத் தொழிலாளரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் வீடமைப்புப் பகுதியில் சென்று கொண்டிருந்த அந்தப் பெண், ஊராட்சி மன்றத்தினால் மன்றத்தால் நியமிக்கப்பட்ட தெருநாய் பிடிக்கும் பணியாளர்களைச் சந்தித்த போது இரு தரப்புக்கும் இடையே தவறான புரிதல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பணியாளர்களில் ஒருவர் தம்மை அவமதிக்கும் வகையில் ஆபாசமான கை சைகை செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.
இன்று அதிகாலை 2.02 மணிக்கு புகார் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு 1955ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.








