Sep 18, 2026
Thisaigal NewsYouTube
வீட்டுக் காவல் என்றால் குடும்பத்துடன் சேர்ந்து வாழலாம் என்று அர்த்தமல்ல
தற்போதைய செய்திகள்

வீட்டுக் காவல் என்றால் குடும்பத்துடன் சேர்ந்து வாழலாம் என்று அர்த்தமல்ல

Share:

டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் தொடர்பில், அவர் தனது மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோருடன் தற்போது வசிக்கும் வீட்டில் சாதாரண வாழ்க்கையைத் தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறையில் தண்டனை அனுபவிப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் இருக்கும் ஒருவரும், சிறைக் கைதிகளுக்கான விதிமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்கு உட்பட்டவராகவே இருப்பார் என்று வழக்கறிஞர் டத்தோ ஷம்சுடின் நவாவி தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்படாத அல்லது குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படாத மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை கைதியுடன் சேர்த்து தடுத்து வைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

எனவே, நஜிப் தனது தற்போதைய வீட்டில் ரோஸ்மாவுடன் சேர்ந்து வசிக்கப் போகிறார் என்ற தகவல் உண்மையல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

1995-ஆம் ஆண்டு சிறைச்சாலைச் சட்டத்தின் 3-வது பிரிவின்படி, அமைச்சர் ஒருவர், எந்தவொரு வீடு, கட்டிடம் அல்லது இடத்தையும் சிறைச்சாலையாக அறிவிக்க முடியும் என்றும் ஷம்சுடின் தெரிவித்தார்.

அவ்வாறு ஒரு வீடு, சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டால், அது சாதாரண இல்லமாகச் செயல்படாது. சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில், கைதிகளுக்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்ட இடமாகவே செயல்படும்.

அதாவது, ‘வீட்டுக் காவல்’ என்ற பெயர் இருந்தாலும், அது குடும்பத்துடன் சுதந்திரமாக வாழும் வாழ்க்கை அல்ல என்று வழக்கறிஞர் ஷம்சுடின் நவாவி விளக்கினார்.

Related News