கிள்ளான், ஆகஸ்ட்.06-
கிள்ளான் அருகில் உள்ள பூலாவ் கெத்தாம் படகுத் துறையில் மாதுவும் அவரது மகளும் கடலில் விழுந்து மரணமுற்றனர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 6.39 மணியளவில் நிகழ்ந்தது. தனது மூன்று வயது மகளை அழைத்துக் கொண்டு படகுத் துறையை நோக்கிச் சென்ற அந்த மாதுவும், அவரின் மகளும் திடீரென்று காணவில்லை என்று படகுத் துறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவில் தெரிய வந்துள்ளது.
41 மாதுவும், அவரின் மகளும் படகுத் துறையில் விழுந்ததைப் போலீசார் உறுதிப்படுத்தினர்.








