சிப்பாங், ஜூலை.20-
நாட்டில் உள்ள அனைத்து நுழைவாயில்களிலும் அந்நிய நாட்டவர்களுக்கான ஆட்டோகேட் எனப்படும் தானியங்கி கதவு முறையில் ஏற்பட்ட இடையூறு, கீழறுப்பு செயல்களால் அல்ல என்று மலேசிய எல்லை பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஸையின் தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பாக மேற்கொண்ட விரிவான சோதனை மற்றும் ஆய்வில் சைபர் தாக்குதலினால் ஏக காலத்தில் இந்தக் கோளாறு ஏற்படவில்லை. எனினும் இந்த இடையூறு முழுமையாகச் சீர்படுத்தப்பட்டு, செயல்படத் தொடங்கியுள்ளதாக டத்தோ ஶ்ரீ ஷுஹைலி இன்று விளக்கம் அளித்தார்.








