Oct 17, 2026
Thisaigal NewsYouTube

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் எண்மர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் எண்மர் காயம்

செகிஞ்சன்,அக்டோபர் 26-

கோலசிலாங்கூர் செகிஞ்சன் அருகில், ஜாலான் கோலா சிலாங்கூர் - தெலுக் இந்தான் சாலையில் இன்று அதிகாலையில் மூன்று வாகனங்கள் சம்பந்தபட்ட சாலை விபத்தில் எட்டு பேர் காயமுற்றனர். இருவர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பெரும் அவதிக்கு ஆளாகினர்.

இவ்விபத்து தொடர்பில் அதிகாலை 2.21 மணியளவில் தீயணைப்பு, மீட்புப்படையினர் அவசர அழைப்பைப்பெற்றதாக அதன் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார்தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு செகிஞ்சன் நிலையத்திலிருந்து ஒரு தீயணைப்பு இயந்திரம், ஒரு EMRS வண்டி ஆகியவற்றுடன் எட்டு வீரர்கள் சென்றனர். இவ்விபத்தில் ஒரு கார் மற்றும் இரு லோரிகள் சம்பந்தப்பட்டு இருந்தாக அவர் குறிப்பிட்டார்.

காயமுற்ற எட்டு பேரில் அறுவர், பொது மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர். இருவர் மட்டும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, வேதனைக்கு ஆளாகினர். அவ்விருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது

பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது

அட்டேக் பட்டதாரிகளுக்கு 98 விழுக்காடு வேலைவாய்ப்பு – வரலாற்றுச் சாதனை படைத்த மனிதவள அமைச்சு

அட்டேக் பட்டதாரிகளுக்கு 98 விழுக்காடு வேலைவாய்ப்பு – வரலாற்றுச் சாதனை படைத்த மனிதவள அமைச்சு

பள்ளிகளில் சந்தேகப் பொட்டலங்கள் – பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

பள்ளிகளில் சந்தேகப் பொட்டலங்கள் – பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

துறைமுகங்கள், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகளிலும் 5ஜி சேவை – அளவீட்டு முறையை மறுஆய்வு செய்ய மலேசியா திட்டம்

துறைமுகங்கள், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகளிலும் 5ஜி சேவை – அளவீட்டு முறையை மறுஆய்வு செய்ய மலேசியா திட்டம்