கம்போடியா நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு அமைச்சருமான Prak Sokhonn, இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று மலேசியா வந்தடைந்தார்.
பிரதமர் Datuk Seri Anwar Ibrahim-ஐ அவர் மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளதுடன், வெளியுறவு அமைச்சர் Datuk Seri Mohamad Hasan-உடனும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும், நாளை கோலாலம்பூரில் நடைபெறும் இரு தரப்பு ஒத்துழைப்புக்கான கம்போடியா-மலேசியா கூட்டு ஆணையமான JCBC-ன் 3-வது கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் முந்தைய ஒப்பந்தங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.
கடந்த ஆண்டு நிலவரப்படி, கம்போடியாவில் மலேசியாவின் மொத்த முதலீடு 3.20 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது மலேசிய மதிப்பில் 13.07 பில்லியன் ரிங்கிட் ஆக உள்ளது.
மேலும், 2025-இல் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 27.4 சதவீதம் உயர்ந்து 5 பில்லியன் ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








