Aug 13, 2026
Thisaigal NewsYouTube
2027 கல்வியாண்டு: MRSM, SBP பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 14 இறுதி நாள்
தற்போதைய செய்திகள்

2027 கல்வியாண்டு: MRSM, SBP பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 14 இறுதி நாள்

Share:

2027-ஆம் கல்வியாண்டில், முதல் படிவம் மற்றும் நான்காம் படிவ மாணவர்கள், மாரா இளநிலை அறிவியல் கல்லூரியான MRSM மற்றும் அரசாங்க உறைவிடப் பள்ளிகளான SBP- யில் இணைந்து பயில்வதற்கு விண்ணப்பிக்க, வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இறுதி நாளாகும். இப்பள்ளிகளில் பயில தகுதியுடைய இந்திய மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கும்படி வழிகாட்டல் மற்றும் சமூக வலுவூட்டல் இயக்கமான ACE கேட்டுக் கொண்டுள்ளது.

பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள B40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்குச் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும். உலகத்தரம் வாய்ந்த கல்விச் சூழல், முழு தங்கும் வசதி மற்றும் பிரகாசமான உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கும் இந்தப் பள்ளிகளில் பயில, ஒரே ஒரு விண்ணப்பமும் ஒரு நுழைவுத் தேர்வும் எழுதினால் போதுமானது.

கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கைகளில் சிறந்த அடைவுநிலை கொண்ட மாணவர்கள், இறுதி நேரத் தவிப்பைத் தவிர்க்க இன்றே விண்ணப்பிக்கும்படி வழிகாட்டல் மற்றும் சமூக வலுவூட்டல் இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் குணசேரகன் கந்தசுவாமி கேட்டுக் கொள்கிறார்.

எனவே, விண்ணப்பிக்க தகுதி பெற்ற மாணவர்கள் spskt1.moe.gov.my என்ற அகப்பக்க முகவரியில் அடுத்தாண்டுக்கான முதலாம் படிவத்திற்கும், spskt4.moe.gov.my அடுத்தாண்டிற்கான நான்காம் படிவத்திற்கும் விண்ணப்பிக்கலாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி