Sep 21, 2026
Thisaigal NewsYouTube
7 சக நாட்டவர்களைக் கடத்திய மியன்மார் நபர் மீது ஈப்போ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

7 சக நாட்டவர்களைக் கடத்திய மியன்மார் நபர் மீது ஈப்போ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

சொந்த நாட்டைச் சேர்ந்த 7 பேரை மலேசியாவிற்குள் சட்டவிரோதமாகக் கடத்தியதாக 35 வயது மியன்மார் நாட்டைச் சேர்ந்த நபர், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

Zaw Zaw Aung என்ற அந்த நபர், கடந்த ஜூலை 13-ஆம் தேதி மதியம் 12 மணியளவில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் மெனோரா சுரங்கப் பாதை அருகே இந்த ஆள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டை அவர், புரிந்து கொள்ளும் வகையில் மியன்மார் மொழிபெயர்ப்பாளரை நியமிப்பதற்கு ஏதுவாக இவ்வழக்கு வரும் செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் சொஸ்மா சட்டப் பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

50 மில்லியன் ரிங்கிட் அபராதம் இன்னும் செலுத்தப்படவில்லை… நஜிப்பின் வீட்டுக் காவல் தாமதம்

50 மில்லியன் ரிங்கிட் அபராதம் இன்னும் செலுத்தப்படவில்லை… நஜிப்பின் வீட்டுக் காவல் தாமதம்

55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மனநலப் பாதிப்புக்கு அதிக ஆபத்தில்

55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மனநலப் பாதிப்புக்கு அதிக ஆபத்தில்

மலேசிய இந்தியர்களின் மனம் கவர்ந்து, நாவுக்கு சுவையூட்டிய காரசாரம்… சிங்கப்பூரிலும் புதிய கிளை

மலேசிய இந்தியர்களின் மனம் கவர்ந்து, நாவுக்கு சுவையூட்டிய காரசாரம்… சிங்கப்பூரிலும் புதிய கிளை

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு