Aug 3, 2026
Thisaigal NewsYouTube
பெந்தோங்கில் கோர விபத்து: மரம் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
தற்போதைய செய்திகள்

பெந்தோங்கில் கோர விபத்து: மரம் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

Share:

பகாங், பெந்தோங் அருகே ஜாலான் Jalan Karak Lama-வில் இன்று மதியம் கார் மீது ராட்சத மரம் முறிந்து கீழே விழுந்த கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஒரு சிறுவன் காயமடைந்தான்.

இன்று மதியம் 12.30 மணியளவில் Janda Baik நுழைவாயில் நோக்கிச் சென்று கொண்டிருந்த பிக்அப் ரக வாகனம் ஒன்றின் மீது திடீரென மரம் விழுந்து நசுங்கியதாகப் பெந்தோங் மாவட்டப் போலீஸ் தலைவர் Zaiham Kahar தெரிவித்தார்.

இவ்விபத்தில், 35 வயதுடைய ஓட்டுநர், முன் இருக்கையில் அமர்ந்திருந்த 36 வயதுப் பெண் மற்றும் அவரது 5 வயது மகன், பின் இருக்கையில் இருந்த 40 வயது நபர் ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வாகனத்தின் பின் இருக்கையில் இருந்த மற்றொரு 5 வயது சிறுவன் காயங்களுடன் மீட்கப்பட்டு பெந்தோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளான். உயிரிழந்த நால்வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்காகத் தெமர்லோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று Zaiham Kahar தெரிவித்தார்.

Related News