ஷா ஆலாம், ஆகஸ்ட்.13-
முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி மகன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணையைத் துரிதப்படுத்துமாறு உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பணித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை துரிதமாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.








