May 24, 2026
Thisaigal NewsYouTube
EPF புதிய தலைவராக சுகி அலி நியமிக்கப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

EPF புதிய தலைவராக சுகி அலி நியமிக்கப்பட்டுள்ளார்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26-

அரசாங்க தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து கடநத் வாரம் பணி ஓய்வுப்பெற்ற டான் ஸ்ரீ சுகி அலி, தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF- பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுச் சேவைத்துறையில் பரந்த அனுபவத்தை கொண்டவரான டான் ஸ்ரீ சுகி அலி, - க்கு புதிய பொறுப்பும், கடமையும் காத்திருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த நிலையில் நிதி அமைச்சுக்கு உட்பட் EPF வாரியத்தின் புதிய தலைவாக டான் ஸ்ரீ சுகி அலி, நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மே முதல் EPF தலைவராக பொறுப்பேற்று இருந்த அஹ்மத் பத்ரி ஜாஹிர்- க்கு பதிலாக டான் ஸ்ரீ சுகி அலி, அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் இந்த நியமனம், அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

Related News