செர்டாங், அக்டோபர்.25-
கடந்த ஜுன் மாதத்தில் பூச்சோங் பகுதியில் கார் ஒன்று எதிர்த்திசையில் மிக அபாயகரமாகச் செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த காரின் உரிமையாளரைப் போலீசார் அடையாளம் கண்டு வருவதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.
மற்ற வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செலுத்தப்பட்ட அந்த கார் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்தக் காரையும், அதன் உரிமையாளரையும் போலீசார் அடையாளம் கண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பூச்சோங், ஜாலான் மெர்போக்கில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தினால் தனது பாதுகாப்பு குறித்து அச்சப்பட்ட வாகனமோட்டி ஒருவர், கடந்த ஜுலை 27 ஆம் தேதி போலீசில் புகார் செய்து இருப்பதாக ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.








