Sep 27, 2026
Thisaigal NewsYouTube
செபராங் பிறை உத்தாரா போலீஸ் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் மறுப்பு
தற்போதைய செய்திகள்

செபராங் பிறை உத்தாரா போலீஸ் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் மறுப்பு

Share:

குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர், 1,500 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த 39 வயது இன்ஸ்பெக்டர் முகமட் ஃபிர்தௌஸ் கமல்என்பவருக்கு எதிராக இக்குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அவர் விசாரணை கோரியதைத் தொடர்ந்து அவர் பத்தாயிரம் ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

1953-ஆம் ஆண்டு சூதாட்டச் சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்த ஒரு வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் சுமூகமாக முடிப்பதற்கு அந்த போலீஸ் அதிகாரி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News