தைப்பிங், டிசம்பர்.20-
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் சங்காட் ஜெரிங் அருகே இன்று காலையில் நிகழ்ந்த விபத்தில் மூன்று போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர். இந்த விபத்து வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 209 ஆவது கிலோமீட்டரில் வடக்கு நோக்கிச் செல்லும் சாலையில் நிகழ்ந்தது.
போலீஸ் ரோந்து வாகனமான எம்பிவி ஒன்று, அவசர வழித்தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ரோந்து வாகனத்தில் இருந்த மூன்று போலீஸ் அதிகாரிகளும் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காகத் தைப்பிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் நாசிர் இஸ்மாயில் தெரிவித்தார்.








