கட்டொழுங்குப் பிரச்னை காரணமாக அரச மலேசிய போலீஸ் படையில் இவ்வாண்டில் முதல் ஐந்து மாத காலக் கட்டத்தில் 34 போலீஸ்காரர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகாரிகளும் அடங்குவர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உயர்நெறி இலாகா இயக்குநர் டத்தோ செரி அஸ்ரி அஹ்மாட் தெரிவித்தார்.
கட்டொழுங்குப் பிரச்சனை காரணமாக இக்காலக் கட்டத்தில் 496 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 34 பேர் போலீஸ் படையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்று அஸ்ரி அஹ்மாட் குறிப்பிட்டார்.
ஒழங்கு நடவடிக்கைக்கு ஆளாகி தற்போது தொடர்ந்து சேவையில் உள்ள போலீஸ்காரர்களுக்கு எதிராக எச்சரிக்கை, அபராதம், பதவி உயர்வு நிறுத்தம், சம்பள உயர்வு நிறுத்தம், சம்பளக்குறைப்பு, பதவி இறக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


