பகாங், மெந்தக்காப், ஜாலன் மொஹ் ஹீ கியாங் சாலையில், பேரங்காடி மையம் ஒன்றின் முன்புறம், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், ஆசிரியை ஒருவரின் 30 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள தங்கச் சங்கிலியை பறித்து சென்றார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் நிகழ்ந்தது. அந்த பேரங்காடி மையத்தில் பொருட்களை வாங்கியப் பின்னர், தனது பிள்ளையுடன் கார் நிறுத்தும் இடத்தை நோக்கி அந்த பெண்மணி, நடந்து வந்து கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெமர்லோ மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ரொஸ்லி ஒமார் தெரிவித்தார்.
யமஹா Y16 ரக மோட்டார் சைக்கிளில் வந்த அந்த ஆசாமி, மிக நெருக்கமான நிலையில் அந்த ஆசிரியையும் தங்கச் சங்கிலியை மின்னல் வேகத்தில் பறித்துச் சென்றுள்ளார். இந்த வழிபறிக் கொள்ளைச் சம்பவம், அந்த பேரங்காடி மையத்தில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது என்ற போதிலும் அந்த கொள்ளையனின் மோட்டார் சைக்கிளின் பதிவு எண் தெளிவாக காண இயலவில்லை என்று ரொஸ்லி ஒமார் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


