May 22, 2026
Thisaigal NewsYouTube
16 வாகனங்கள் தீயில் எரிந்தன
தற்போதைய செய்திகள்

16 வாகனங்கள் தீயில் எரிந்தன

Share:

சுங்கை பெட்டானி, பிப்ரவரி 26 -

சுங்கை பெட்டானி,தாமான் கெலாடி யில் உள்ள இரண்டு வாகன பட்டறைகளில் நிகழ்ந்த தீ விபத்தில் 5 கார்கள் உட்பட 11 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சேதமுற்றன.

இன்று அதிகாலை 5:23 மணியளவில் தீ விபத்தை குறித்து தனது தரப்பினருக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் தீயணைப்பு, மீட்புப்படையினர் அவ்விடத்திற்கு விரைந்ததாகவும் சுங்கை பட்டாணி தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தின் தலைவர் இஸ்மாயில் மோஹாமாட் சாயின் தெரிவித்தார்.

சுங்கை பெட்டானி தீயணைப்பு நிலையத்திலிருந்து அக்குழுவின் தலைவரான முகமட் ராஹிமி அபு ஹாசான் னுடன் 11 தீயணைப்பு வீரர்கள் சம்பவ நிகழ்ந்த இடத்திற்கு சென்றதாக இஸ்மாயில் மோஹாமாட் விவரித்தார்.

இந்த விபத்தில் உயிர் சேதம் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் இஸ்மாயில் மோஹாமாட் கூறினார்.

இன்று காலை 6:36 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதுடன் தீ ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் விளக்கினார்.

Related News