Sep 27, 2026
Thisaigal NewsYouTube
என்ஜிஓ தொடர்புகள் குறித்து அறிவிக்க எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு
தற்போதைய செய்திகள்

என்ஜிஓ தொடர்புகள் குறித்து அறிவிக்க எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் , தங்களது அதிகாரிகள் அனைவரும் தாங்கள் ஈடுபட்டுள்ள அரசு சாரா அமைப்புகளின் தொடர்புகளை கட்டாயமாக அறிவிக்க வேண்டும் என்ற புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கையானது, அமைப்பின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் பாதுகாக்க மிகவும் முக்கியமானது என எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, நிதி மோசடி அல்லது தவறான பயன்பாடு போன்ற விவகாரங்களில், NGO தொடர்புகள் காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்க்க இந்த முன்கூட்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இத்தகைய நடவடிக்கைகள் மூலம் எஸ்.பி.ஆர்.எம் அமைப்பின் நல்ல பெயரும் பொதுமக்களின் நம்பிக்கையும் பாதுகாக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News