ஜோகூர் மாநிலம் ஸ்குடாய் தாமான் யுனிவர்சிட்டி, பகுதியில் உள்ள ஒரு பள்ளி வாசலின் வாகன நிறுத்துமிடத்தில் கடந்த சனிக்கிழமை பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கண்டறியப்பட்டது.
மாலை சுமார் 7.30 மணியளவில், குழந்தை அழும் சத்தம் கேட்டதாக அவ்வழியே சென்ற ஒருவர் போலீசில் புகார் அளித்ததாக ஜோகூர் பாரு உத்தாரா போலீஸ் தலைவர் ராடின் ரம்லான் ராடின் தாஹா தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஒரு துணியில் மடக்கி வைக்கப்பட்டிருந்த பெண் குழந்தையை கண்டறிந்தனர்.
அந்த குழந்தையின் தொப்புள் கொடி கூட இன்னும் வெட்டப்படாமல் இருந்ததாகவும் ராடின் ரம்லான் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








