Sep 4, 2026
Thisaigal NewsYouTube
புகைமூட்டம் எதிரொலி – ஏர்ஏசியா விமானங்கள் ரத்து செய்யப்படலாம்
தற்போதைய செய்திகள்

புகைமூட்டம் எதிரொலி – ஏர்ஏசியா விமானங்கள் ரத்து செய்யப்படலாம்

Share:

கிழக்கு மலேசியா மற்றும் மேற்கு கலிமந்தானில் நிலவும் கடுமையான புகைமூட்டத்தால் பார்வைத்திறன் குறைந்துள்ள நிலையில், ஏர்ஏசியாவின் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் பயணிகளுக்கு நேரடியாகத் தகவல் தெரிவிக்கப்படும் என ஏர்ஏசியா கூறியுள்ளது. எந்தெந்த விமானங்கள் பாதிக்கப்படும் என்பது குறித்து இதுவரை குறிப்பிட்ட தகவல் வெளியிடப்படவில்லை.

பயணிகள் தங்களது விமான நிலவரத்தை MOVE செயலி அல்லது ஏர்ஏசியா இணையதளத்தின் ஃப்ளைட் ஸ்டேட்டஸ் பகுதியில் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

செரியன் பிரிவில் காற்று மாசு பொதுமக்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தான அளவை எட்டியதைத் தொடர்ந்து அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

Related News