Sep 4, 2026
Thisaigal NewsYouTube
9 நாட்கள் இருள்… உயிருடன் மீண்டார் சஞ்சய் ஷா – நேபாள வெள்ளத்தில் நெகிழ வைத்த மீட்பு
தற்போதைய செய்திகள்

9 நாட்கள் இருள்… உயிருடன் மீண்டார் சஞ்சய் ஷா – நேபாள வெள்ளத்தில் நெகிழ வைத்த மீட்பு

Share:

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தில், ஒன்பது நாட்களாக இருள்சூழ்ந்த சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சஞ்சய் ஷா என்பவரை மீட்புக் குழுவினர் இன்று உயிருடன் மீட்டனர்.

வெள்ளம் தாக்கிய ஆகஸ்ட் 26ஆம் தேதியில் இருந்து ஒன்பது நாட்கள்… வெளியுலகத் தொடர்பின்றி, இருளுக்குள் உயிரைக் கையில் பிடித்தபடி அவர் காத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கத்துக்குள் இருந்து மனிதக் குரல் கேட்டதைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர், “பதற்றப்பட வேண்டாம்… உங்களைக் காப்பாற்ற நாங்கள் வந்துள்ளோம்” என்று குரல் கொடுத்தனர். அதற்கு உள்ளிருந்து “சரி” என்ற பதில் வந்தது.

இதையடுத்து அங்கு ஒருவருக்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களை மீட்க நேபாள ராணுவமும் ஆயுதப்படை போலீஸ் துறையும் தீவிரமாக போராடி வருகின்றன.

இதனிடையே, வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,798 பேர் காணாமல் போயுள்ளனர்.

Related News