மனிதநேயம், சுற்றுச்சூழல், அறிவியல், கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய 8 மலேசியர்களுக்கும் அமைப்புகளுக்கும் 2026ஆம் ஆண்டுக்கான மெர்டேக்கா விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பெருமைக்குரிய விருதுகளை, மெர்டேக்கா விருது அறக்கட்டளையின் அரசப் புரவலரும் தலைவருமான பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா வழங்கினார்.
முன்னாள் உலக ஸ்குவாஷ் சாம்பியனான டத்தோ நிக்கோல் டேவிட், மனிதநேயம், கலை மற்றும் விளையாட்டுத் துறைக்கான சிறப்புப் பங்களிப்புக்காக விருது பெற்றார்.
உலக ஸ்குவாஷ் அரங்கில் மலேசியாவின் பெயரை உயர்த்தியதுடன், இளைஞர்களை ஊக்குவித்ததற்காகவும் அவர் கௌரவிக்கப்பட்டார்.
மெர்சி மலேசியா இயக்கப் பொறுப்பாளர்கள், பேராசிரியர் டாக்டர் சான் எங் ஹெங், பேராசிரியர் டத்தின் படுகா செத்தியா டத்தோ டாக்டர் ஐனி இதெரிஸ், பேராசிரியர் டத்தோ டாக்டர் அஸ்மா இஸ்மாயில் மற்றும் மொழியியலாளர் டத்தோ டாக்டர் அஸ்மா ஒமர் உள்ளிட்டோரும் பல்வேறு பிரிவுகளில் விருது பெற்றனர்.








