சூதாட்டத்திற்கு எதிரான நிலைப்பாடு ஏற்கனவே பாஸ் கட்சியின் கொள்கையிலும் கட்சியின் அமைப்புச்சட்டத்திலும் இடம்பெற்றுள்ளதால், அதனை எதிர்வரும் தேர்தல் அறிக்கையில் தனியாகச் சேர்க்கத் தேவையில்லை என கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி முகமட் நோர் தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சியின் கொள்கை இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், இஸ்லாத்தில் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால், அது கட்சியின் அரசியலமைப்பிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சூதாட்டம் மற்றும் மதுபானத் தடையை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என பெர்லிஸ் முஃப்தி டத்தோ டாக்டர் முகமட் அஸ்ரி சைனுல் அபிடின் விடுத்த சவாலுக்கு பதிலளிக்கும் வகையில் சனுசி இக்கருத்தைத் தெரிவித்தார்.
இதனிடையே, கெடாவில் சூதாட்ட நிலையங்களின் உரிமம் புதுப்பிக்கப்படாதது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடினால், அதனை எதிர்கொள்ள மாநில அரசு தயாராக இருப்பதாகவும் சனூசி தெரிவித்தார்.








