Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஜெண்டோ 3,689 டிரான்ஸ்மிட்டர்டிகள், சரவாக்கில் மேம்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

ஜெண்டோ 3,689 டிரான்ஸ்மிட்டர்டிகள், சரவாக்கில் மேம்படுத்தப்படும்

Share:

2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு நிலவரப்படி சரவாக்​கில் தேசிய இலக்கவியல் இணைப்புத்​திட்டம் எனும் ஜெண்டோ திட்டத்தின் ​மூலம் மொத்தம் 3,689 டிரான்ஸ்மிட்டர்களும் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 331 வளாகங்களில் பைபர் ஆப்டிக் அணுகலும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு , இலக்கவியல் துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

ஜெண்டோ மூலம், மொத்தம் 213 புதிய தகவல் தொடர்புக் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு, 864 கோபுரங்களில் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக துணை அமைச்சர் தியோ நீ சிங் குறிப்பிட்டார். மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்​லூடக ஆணையம், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குறிப்பாகத் கிராமப்புறங்களில் இணைய இணைப்பை விரிவுபடுத்துகிறது என்று துணை அமைச்சர் விளக்கினார்.

Broadband Wireless Acces எனப்படும் இணைப்பின்றி அகண்ட அணுகல் மூலம் மொத்தம் 523 இட​ங்களில் இணைய சேவைகளைப் பெற்றுள்ளன என்று நேற்று மக்களவையில் ஜி.பி.எஸ் கூட்டணியின் இகான் எம்.பி. ஹாஜி அஹ்மத் ஜானி ஜவாவி யின் கேள்விக்கு பதில் அளிக்கையில் தியோ நீ சிங் இதனை தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி சரவாக்கில் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், 4ஜி சேவை 87.52 விழுக்காடாக எட்டியுள்ளது. ​எஞ்சிய பகுதிகளில் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் படிப்படியாக முடிக்கப்படும் ​என்று தியோ நீ சிங் பதில் அளித்தார்.

Related News