Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பத்து டுவா ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் நிர்வாகம் பிரச்னை: உள்துறை அமைச்சு பிரச்னை எழுப்ப இல்லை
தற்போதைய செய்திகள்

பத்து டுவா ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் நிர்வாகம் பிரச்னை: உள்துறை அமைச்சு பிரச்னை எழுப்ப இல்லை

Share:

சுங்கை பட்டாணி, செப்டம்பர்.22-

கெடா சுங்கை பட்டாணியில் அமைந்துள்ள பத்து டுவா ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் நடப்புப் பிரச்னைக்கு செயற்குழு உறுப்பினர்கள் காரணமே தவிர உள்துறை அமைச்சு அல்ல என்று மலேசிய இந்து சங்கத்தின் கெடா மாநில பேரவைத் தலைவர் தலைவர் பரமசிவன் தெளிவுபடுத்தினார்.

ஆலய நிர்வாக உறுப்பினர்களிடையே உள்ள பிரச்னைக்கு அரசியல் முலாம் பூச வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பத்து டுவா ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் நிர்வாக பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் சங்கங்களின் பதிவு அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில் 32 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது . 150 உறுப்பினர்களில் 132 பேர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, புதிய செயலவையைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல், கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி கெடா மாநில இந்து சங்கத்தின் அலுவலகத்தில் நடத்தப்பட்டது .

வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களுக்கு எதிராக எந்தவோர் எதிர்ப்பும் வராததால் வேட்புமனுத் தாக்கல் செய்த கார்த்திக்கேசு தலைமையிலான நிர்வாகக் குழுவினரே போட்டியின்றி தேர்வுச் செய்யப்பட்டதாக பரமசிவன் அறிவித்ததுடன் நற்சான்றிதழையும் வழங்கினார்.

அதன்படி ஆலயத்தின் ஆண்டுக் கூட்டமும் எவ்வித பிரச்னையின்றி சுமூகமாக நடைபெற்றதாக பரமசிவன் குறிப்பிட்டார்.

Related News