Nov 7, 2026
Thisaigal NewsYouTube

நஜிப் வீட்டுக் காவலுக்கு இடையூறுகள் செய்ய வேண்டாம்: மாமன்னரின் உத்தரவு குறித்து இஸ்தானா நெகாரா கடும் எச்சரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப் வீட்டுக் காவலுக்கு இடையூறுகள் செய்ய வேண்டாம்: மாமன்னரின் உத்தரவு குறித்து இஸ்தானா நெகாரா கடும் எச்சரிக்கை

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பு முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

நஜிப் ரஸாக்கின் வீட்டுக் காவல் கோரிக்கையை மறுஆய்வு செய்யும் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று சட்டத்துறைத் தலைவர் அலுவலகமான ஏஜிசி பரிந்துரைத்துள்ள நிலையில், மாமன்னர் இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில், இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், நஜிப் ரஸாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பு உத்தரவு தெளிவானது என்றும், அதில் எவ்வித குழப்பத்திற்கும் இடமில்லை என்றும் மாமன்னர் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் தொடர்புடைய பிற வழக்குகளுக்கும் இந்த நிபந்தனை மன்னிப்பு உத்தரவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாமன்னரின் ஒப்புதலுடன் வழங்கப்பட்ட முடிவைச் செயல்படுத்துவதில் அதன் விளக்கம் குறித்து குழப்பமோ அல்லது நீண்டகால நிச்சயமற்ற தன்மையோ நிலவக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நிபந்தனை மன்னிப்பு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து முன்வைக்கப்படும் எந்தவொரு வாதமும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் உத்தரவை மீறும் செயலாகவே கருதப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →