Nov 7, 2026
Thisaigal NewsYouTube

சுல்தான் பிறந்தநாள் கொண்டாட்டம்: பேராவில் 58 கைதிகளுக்கு மன்னிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுல்தான் பிறந்தநாள் கொண்டாட்டம்: பேராவில் 58 கைதிகளுக்கு மன்னிப்பு

பேராக் மாநிலத்தில் முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 58 கைதிகளுக்கு, அம்மாநில சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா அரச மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இதன் மூலம் அவர்கள் தங்களது சிறைத்தண்டனை காலம் முடிவடைவதற்கு முன்பே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சுல்தானின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பேராக் மன்னிப்பு வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் விடுதலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து, சிறைக்கு வெளியே மறுவாழ்வு நடவடிக்கைகளைத் தொடர முடியும் என பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தத்திற்கான சிறைத்துறை துணை ஆணையர் சே டின் என்றழைக்கப்படும் ரோசோமான் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு பெற்றவர்களில் 3 பேர் பெண்கள் என்றும், மற்ற அனைவரும் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →