Nov 6, 2026
Thisaigal NewsYouTube

98 குடும்பங்களுக்கு தீபாவளி உதவி – புதிய வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
98 குடும்பங்களுக்கு தீபாவளி உதவி – புதிய வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும்

கோலால்ம்பூர், புக்கிட் கியாரா நீண்ட வீட்டில் வசிக்கும் 98 குடும்பங்களுக்கு தீபாவளி கொண்டாட்டத்திற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோவின் அரசியல் செயலாளர் யாப் யீ வோன், அமைச்சரின் சார்பில் அங்கு நேரில் சென்று குடும்பங்களைச் சந்தித்து இந்த உதவிகளை வழங்கினார்.

அக்குடும்பங்கள் தீபாவளிக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு அது பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அப்பகுதியில் புதிய வீடுகளைக் கட்டுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மேம்பாட்டாளர்கள் தற்போது தொழில்நுட்ப நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்தும் சுமூகமாக முடிவடைந்ததும், கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →