நஜிப்பின் இல்லம் அருகே போலீஸ் துறை பாதுகாப்புத் தடுப்புகளை அகற்றியது
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் இல்லம் அமைந்துள்ள ஜாலான் லங்காக் டூத்தா சந்திப்பில் போடப்பட்டிருந்த போலீஸ் துறையின் பாதுகாப்புத் தடுப்புகள் இன்று மாலை அகற்றப்பட்டன.
மாலை சுமார் 7 மணியளவில் மழை நின்றதைத் தொடர்ந்து, போலீஸ் துறையினர் மஞ்சள் நிற பாதுகாப்பு நாடாக்களை அகற்றினர்.
இதற்கு முன்னதாக, நஜிப்பின் வீட்டுக் காவல் தொடர்பான அரச மன்னிப்பு உத்தரவின் சட்ட விளக்கம் குறித்து தெளிவு கிடைக்கும் வரை, அவரை வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சட்டத்துறை அலுவலகம் கோரிக்கை விடுத்திருந்தது.








