Nov 6, 2026
Thisaigal NewsYouTube

நேபாளம் – திபெத் வெள்ளப் பேரிடரில் உயிரிழந்த 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நேபாளம் – திபெத் வெள்ளப் பேரிடரில் உயிரிழந்த 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளம் – திபெத் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பேரிடரில் உயிரிழந்த 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 ஆயிரம் ரிங்கிட் ஒருமுறை நிதியுதவி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.

தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனமான நட்மா (NADMA) வழியாக இந்த நிதியுதவி வழங்கப்படும் என்றும், முன்னுரிமை அடிப்படையில் உயிரிழந்தவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு முதலில் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்ததாக பெற்றோருக்கும், பின்னர் பிள்ளைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என அவர் விளக்கினார்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விரைவில் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களைத் திரட்டுமாறு மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ரமணன் தெரிவித்தார்.

இந்தப் பேரிடரில் இதுவரை 1,451 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5,700 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →