Nov 6, 2026
Thisaigal NewsYouTube

நஜிப்பின் வீட்டுக் காவலுக்கு சட்டத்துறை அலுவலகம் முட்டுக்கட்டை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப்பின் வீட்டுக் காவலுக்கு சட்டத்துறை அலுவலகம் முட்டுக்கட்டை

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக்கை வீட்டுக் காவலில் வைப்பதை, அவருக்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடனான அரச மன்னிப்பு மற்றும் விடுதலை உத்தரவு தொடர்பான மறுஆய்வு முடியும் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், அரச மன்னிப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலான சட்டப் பிரச்சினைகள் இருப்பதாகச் சட்டத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கு முன்னர் நிகழ்ந்திராத தனித்துவமான சட்ட விவகாரம் என்பதால், அரச மன்னிப்பு மற்றும் விடுதலை உத்தரவைச் செயல்படுத்துவதற்கு முன்னதாகத் தெளிவான விளக்கம் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, நஜிப்புக்கு விதிக்கப்பட்ட 5 கோடி ரிங்கிட் அபராதத் தொகையைத் திரட்டுவதற்கான நிதி சேகரிப்பு நடவடிக்கை வெற்றியடைந்துள்ளதாக அம்னோ முன்னதாக அறிவித்திருந்தது.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 4.2 கோடி ரிங்கிட் நிதி முறைகேடு தொடர்பான வழக்கில், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நஜிப் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 21 கோடி ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய மாமன்னர் சுல்தான் அப்துல்லா, அரச மன்னிப்பு வழங்கி அவரது சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் பாதியாகக் குறைத்தார்.

தொடர்ந்து, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கிய நிபந்தனையுடனான மன்னிப்பின்படி, 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது சட்டத்துறை அலுவலகம் முன்வைத்துள்ள பரிந்துரையால் நஜிப்பின் வீட்டுக் காவல் விவகாரம் மீண்டும் சட்டரீதியான பரிசீலனைக்கு உள்ளாகியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →