மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் வியூக தொடர்புப் பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகளுக்கு, மலேசிய மக்கள் தொடர்பு நிறுவனமான ஐபிஆர்எம் (IPRM) வழங்கும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொடர்புத் துறை அங்கீகார விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆறு அதிகாரிகளுக்கும் அப்பிரிவின் இயக்குநர் ஹிஷாம் முஹமட் யுசோஃப் தலைமை தாங்கினார்.
அங்கீகாரம் பெற்ற மற்ற ஐந்து அதிகாரிகள், துணை இயக்குநர் பட்ரிலா ஜம்லுஸ், மல்டிமீடியா பிரிவுத் தலைவர் அஸ்ராய் முஹமட், முஹமட் ஹெல்மி ஃபையிஸ் அலி, ராம மகேஸ்வரன் தண்ணீர்மலை மற்றும் கணேஷ் ராமஜெயன் ஆகியோராவர்.

கணேஷ் ராமஜெயனும், ராம மகேஸ்வரன் தண்ணீர்மலையும், தங்களுக்கான விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
இதற்கிடையே, செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் காலத்திலும் மக்கள் தொடர்புத் துறையில் மனிதர்களின் பங்களிப்பு, உணர்வுப்பூர்வமான அணுகுமுறை மற்றும் நேர்மை ஆகியவை தொடர்ந்து அவசியம் என மலேசிய தகவல் துறை தலைமை இயக்குநர் எர்வின் கைருல் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
இந்த அங்கீகாரம், மக்கள் தொடர்புத் துறையின் தொழில்முறைத் தரத்தையும் நிபுணத்துவத்தையும் மேலும் உயர்த்தும் என ஐபிஆர்எம் தலைவர் ஜஃப்ரி அமின் ஒஸ்மான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








