Nov 6, 2026
Thisaigal NewsYouTube

நஜிப்பின் 5 கோடி ரிங்கிட் அபராதத்தை அம்னோ செலுத்தியதில் அன்வார் அதிருப்தி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப்பின் 5 கோடி ரிங்கிட் அபராதத்தை அம்னோ செலுத்தியதில் அன்வார் அதிருப்தி

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக்கின் 5 கோடி ரிங்கிட் அபராதத்தை அம்னோ செலுத்தியுள்ளதற்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது தனிப்பட்ட எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

நஜிப்புடனான நட்பும் நல்லெண்ணமும், ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோக விவகாரங்களைப் புறக்கணிப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஊழல் விவகாரங்களில் நாம் பிள்ளைகளுக்கு எத்தகைய முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறோம் என்றும் அன்வார் கேள்வி எழுப்பினார்.

எனினும், அபராதத்தைச் செலுத்துவது அம்னோவின் உரிமை என்றும், சட்ட நடைமுறைகளையும் மாமன்னரின் முடிவையும் அரசாங்கம் மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, நஜிப்புக்கான ஆதரவு நிதி திரட்டும் கணக்கை மூடுவதாக அம்னோ அறிவித்துள்ளது. திரட்ட வேண்டிய தொகை கிடைத்ததைத் தொடர்ந்து, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் 5 கோடி ரிங்கிட் அபராதமும் முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →