பேங்க் ரக்யாட் வங்கியின் கார்ப்பரேட் இணையதளச் சேவையில் தற்காலிகமாக அணுகல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிப் பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள மாற்று டிஜிட்டல் சேவைகள் மற்றும் கைப்பேசி செயலிகளைப் பயன்படுத்துமாறு வங்கி அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, ஐரக்யாட் (iRakyat) கைப்பேசி வங்கிச் சேவைச் செயலி, BRICK, QR2E மற்றும் i-bizRAKYAT வணிக வங்கிச் சேவை இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என பேங்க் ரக்யாட் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தற்காலிகச் சிரமத்தால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், வாடிக்கையாளர்களின் பொறுமைக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.








