Nov 7, 2026
Thisaigal NewsYouTube

மலேசிய வானில் தெரிந்த மர்ம ஒளி - நாசா விளக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசிய வானில் தெரிந்த மர்ம ஒளி - நாசா விளக்கம்

நாட்டின் பல பகுதிகளில், கடந்த புதன்கிழமை இரவு வானில் பிரகாசமான ஒளிகள் தென்பட்டு, மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) விளக்கமளித்துள்ளது.

கடந்த 22 ஆண்டுகளாக விண்வெளியில் சுற்றி வந்த நாசாவின் செயலிழந்த செயற்கைக்கோள் தொலைநோக்கி, சுற்றுப்பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி விழுந்தபோது வளிமண்டலத்தில் நுழைந்து தீப்பற்றி எரிந்ததே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வானில் பிரகாசமான ஒளிகள் தென்பட்டது தொடர்பாகத் தங்களுக்குத் தொடக்கநிலைத் தகவல்கள் கிடைத்துள்ளதாக மலேசிய விண்வெளி அதிகாரப் பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், செயற்கைக்கோளின் பாகங்கள் அல்லது ராக்கெட் சிதைவுகள் போன்ற விண்வெளிப் பொருட்கள் மலேசிய நிலப்பகுதியிலோ அல்லது கடல் பகுதிகளிலோ விழுந்ததாக இதுவரை அதிகாரப்பூர்வப் புகார்கள் எதுவும் கிடைக்கவில்லை என அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →