Nov 7, 2026
Thisaigal NewsYouTube

சட்டத்துறை அலுவலகத்தின் நிபந்தனையால் மீண்டும் சிறைக்குத் திரும்பிய நஜிப்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சட்டத்துறை அலுவலகத்தின் நிபந்தனையால் மீண்டும் சிறைக்குத் திரும்பிய நஜிப்

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் வாகனம், நேற்று இரவு மீண்டும் காஜாங் சிறைச்சாலைக்குத் திரும்பியது.

அவரது வீட்டுக் காவலுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, நேற்றைய தினமே இல்லச் சிறைக்கு மாற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இந்தத் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

73 வயதான நஜிப், நேற்று பிற்பகல் சுமார் 2.37 மணியளவில் பல பாதுகாப்பு வாகனங்களின் துணையுடன் காஜாங் சிறைச்சாலையிலிருந்து வெளியேறினார்.

அவரது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் உயர் நீதிமன்ற உத்தரவை அவரது வழக்கறிஞர்கள் சிறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அவர் வெளியேறியதாகக் கூறப்படுகின்றது.

இருப்பினும், நஜிப்புக்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய அரச மன்னிப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவின் சட்டப்பூர்வ விளைவுகள் குறித்து தெளிவு பெறும் வரை, வீட்டுக் காவல் நடைமுறையைத் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என சட்டத்துறை தலைமை அலுவலகமான ஏஜிசி அறிவித்ததையடுத்து, அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →