டிக் டோக் பயனர் ஒருவர், ஆத்திரமூட்டும் மற்றம் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் பினாங்கு மாநகர் மன்றம் போலீசில் புகார் செய்துள்ளது.
சோபியான்மோஹட்சைன் 7 என கணக்கு வைத்திருக்கும் அந்த டிக் டோக் பயனர் பினாங்கு மாநகர் மன்றத்திற்கு எதிராக அந்த காணொளியில் அவதூறு ஏற்படுத்தி வருவதாக பினாங்கு மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ஏ. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பினாங்கு மாநகர் மன்றத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த நபர் செயல்பட்டு வருகிறார் என்று டத்தோ ராஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.








