Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மின்சாரத் திருட்டு, நான்கு நபர்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மின்சாரத் திருட்டு, நான்கு நபர்கள் கைது

செப்பாங், ஜூன்.16-

செப்பாங் வட்டாரத்தில் மின்சார விநியோகத்தைத் திருடுவதற்கு சட்டவிரோதமாக டிஜிட்டல் பிட்கோயின் நாணயங்களைப் பயன்படுத்தியதாக நம்பப்படும் நான்கு நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

செப்பாங்கில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பண்டார் பாரு சாலாக் திங்கி மற்றும் புத்ரா பெர்டானாவில் போலீசார் மேற்கொண்ட சிறப்புச் சோதனை நடவடிக்கையில் இந்த நால்வரும் பிடிபட்டதாக செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.

20 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் தங்களின் சட்டவிரோத நடவடிக்கையில் முக்கியப் பங்காற்றியுள்ளதாக நம்பப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மின்சார விநியோகத்தைத் திருடுவதற்கு அவர்கள் பயன்படுத்திய 143 பிட்கோயின் இயந்திரங்களையும் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →