Sep 10, 2026
Thisaigal NewsYouTube
புத்ராஜெயாவை தெருநாய்கள் இல்லாத நகரமாக மாற்ற வேண்டும் - எம்பி ரட்ஸி ஜிடின் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயாவை தெருநாய்கள் இல்லாத நகரமாக மாற்ற வேண்டும் - எம்பி ரட்ஸி ஜிடின் வலியுறுத்து

Share:

தெருநாய்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண விரிவான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு முன்னுதாரணமாக புத்ராஜெயாவை தெருநாய்கள் இல்லாத நகரமாக மாற்றும் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றும் புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ரட்ஸி ஜிடின் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை ஜோகூர், பத்து பஹாட் பகுதியில் 2 வயது சிறுமி ஒருவர் சுமார் 5 தெருநாய்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக் காட்டிய அவர், அவ்வப்போது தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளால் மட்டும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றார்.

சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்க அமைப்புகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம், சட்டத் திருத்தங்கள் மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஆஸ்திரேலியாவில் தாம் சுமார் 20 ஆண்டுகள் வாழ்ந்த போது, அங்கு ஒரு தெருநாயைக் கூட பார்க்கவில்லை என்றும் ரட்ஸி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நூர் ஹைரா வாதிகா ஹாஸிமி என்ற அந்த சிறுமி, தலையிலும் முகத்திலும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், தற்போது பத்து பஹாட்டில் தொடங்கப்பட்டுள்ள தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையானது, ஜோகூர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

Related News

நஜிப்புக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் ஜசெக அமைச்சர்கள் பதவி விலகுமாறு கோரிக்கை

நஜிப்புக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் ஜசெக அமைச்சர்கள் பதவி விலகுமாறு கோரிக்கை

இணைய மோசடிகளைத் தடுக்கும் சிறப்புப் பணிக் குழுவின் பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவையில் தாக்கல்

இணைய மோசடிகளைத் தடுக்கும் சிறப்புப் பணிக் குழுவின் பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவையில் தாக்கல்

ரோஸ்மா சூரிய மின்சக்தி திட்ட வழக்கில் கூடுதல் சாட்சியம் - செப்டம்பர் 17 -ஆம் தேதி விசாரணை

ரோஸ்மா சூரிய மின்சக்தி திட்ட வழக்கில் கூடுதல் சாட்சியம் - செப்டம்பர் 17 -ஆம் தேதி விசாரணை

தொழிலாளர்களுக்கு ஏஐ, டிஜிட்டல் திறன் வளர்க்கும் திட்டத்திற்கு 3.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் ரமணன் அதிரடி அறிவிப்பு

தொழிலாளர்களுக்கு ஏஐ, டிஜிட்டல் திறன் வளர்க்கும் திட்டத்திற்கு 3.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் ரமணன் அதிரடி அறிவிப்பு

நாளை காலை கூடுகிறது பொது மன்னிப்பு வாரியம் - நஜிப் விவகாரம் குறித்து முடிவு

நாளை காலை கூடுகிறது பொது மன்னிப்பு வாரியம் - நஜிப் விவகாரம் குறித்து முடிவு

விமான விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி: மலேசியாவின் புதிய பாதுகாப்புத் திட்டம் அறிமுகம்

விமான விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி: மலேசியாவின் புதிய பாதுகாப்புத் திட்டம் அறிமுகம்