Sep 10, 2026
Thisaigal NewsYouTube
நஜிப்புக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் ஜசெக அமைச்சர்கள் பதவி விலகுமாறு கோரிக்கை
தற்போதைய செய்திகள்

நஜிப்புக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் ஜசெக அமைச்சர்கள் பதவி விலகுமாறு கோரிக்கை

Share:

ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால், அரசாங்கத்தில் உள்ள ஜசெக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என கோலாலம்பூர் ஜசெக பொருளாளர் பென் ஃபோங் வலியுறுத்தியுள்ளார்.

நஜிப் விடுவிக்கப்பட்டால் ஜசெக தொடர்ந்து அரசாங்கத்தில் நீடிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும், இது கடக்கக் கூடாத சிவப்புக் கோடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் அமைச்சரவையில் இருந்து ஜசெக விலகுவது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதாக அர்த்தமல்ல என்றும் பென் ஃபோங் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், திட்டமிடப்பட்ட சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும், அமைச்சரவைக்கு வெளியிலிருந்து அரசாங்கத்தை ஜசெக தொடர்ந்து ஆதரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தில் தற்போது ஜசெக கட்சியைச் சேர்ந்த 5 அமைச்சர்களும் 7 துணை அமைச்சர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

புத்ராஜெயாவை தெருநாய்கள் இல்லாத நகரமாக மாற்ற வேண்டும் - எம்பி ரட்ஸி ஜிடின் வலியுறுத்து

புத்ராஜெயாவை தெருநாய்கள் இல்லாத நகரமாக மாற்ற வேண்டும் - எம்பி ரட்ஸி ஜிடின் வலியுறுத்து

இணைய மோசடிகளைத் தடுக்கும் சிறப்புப் பணிக் குழுவின் பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவையில் தாக்கல்

இணைய மோசடிகளைத் தடுக்கும் சிறப்புப் பணிக் குழுவின் பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவையில் தாக்கல்

ரோஸ்மா சூரிய மின்சக்தி திட்ட வழக்கில் கூடுதல் சாட்சியம் - செப்டம்பர் 17 -ஆம் தேதி விசாரணை

ரோஸ்மா சூரிய மின்சக்தி திட்ட வழக்கில் கூடுதல் சாட்சியம் - செப்டம்பர் 17 -ஆம் தேதி விசாரணை

தொழிலாளர்களுக்கு ஏஐ, டிஜிட்டல் திறன் வளர்க்கும் திட்டத்திற்கு 3.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் ரமணன் அதிரடி அறிவிப்பு

தொழிலாளர்களுக்கு ஏஐ, டிஜிட்டல் திறன் வளர்க்கும் திட்டத்திற்கு 3.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் ரமணன் அதிரடி அறிவிப்பு

நாளை காலை கூடுகிறது பொது மன்னிப்பு வாரியம் - நஜிப் விவகாரம் குறித்து முடிவு

நாளை காலை கூடுகிறது பொது மன்னிப்பு வாரியம் - நஜிப் விவகாரம் குறித்து முடிவு

விமான விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி: மலேசியாவின் புதிய பாதுகாப்புத் திட்டம் அறிமுகம்

விமான விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி: மலேசியாவின் புதிய பாதுகாப்புத் திட்டம் அறிமுகம்