Sep 10, 2026
Thisaigal NewsYouTube
இணைய மோசடிகளைத் தடுக்கும் சிறப்புப் பணிக் குழுவின் பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவையில் தாக்கல்
தற்போதைய செய்திகள்

இணைய மோசடிகளைத் தடுக்கும் சிறப்புப் பணிக் குழுவின் பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவையில் தாக்கல்

Share:

இணைய மோசடிகளைத் தடுப்பது தொடர்பாக சிறப்புப் பணிக் குழு நடத்திய தொடர் ஆலோசனைகளின் முடிவுகள் விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைகளில் வர்த்தக வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் டிக் டாக் உள்ளிட்ட டிஜிட்டல் தள நிறுவனங்கள் முதல் முறையாக ஒருங்கிணைந்து பங்கேற்றதாக ஃபாஹ்மி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதுள்ள சட்டங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் மோசடி வழக்குகளை விசாரிக்கும் அமலாக்க அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஒருங்கிணைத்து இணைய மோசடிகளைத் தடுப்பதற்காக இந்தப் பணிக்குழுவும் சிறப்பு தொழில்நுட்பக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஃபாஹ்மி ஃபாட்சீல் விவரித்துள்ளார்.

Related News

நஜிப்புக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் ஜசெக அமைச்சர்கள் பதவி விலகுமாறு கோரிக்கை

நஜிப்புக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் ஜசெக அமைச்சர்கள் பதவி விலகுமாறு கோரிக்கை

புத்ராஜெயாவை தெருநாய்கள் இல்லாத நகரமாக மாற்ற வேண்டும் - எம்பி ரட்ஸி ஜிடின் வலியுறுத்து

புத்ராஜெயாவை தெருநாய்கள் இல்லாத நகரமாக மாற்ற வேண்டும் - எம்பி ரட்ஸி ஜிடின் வலியுறுத்து

ரோஸ்மா சூரிய மின்சக்தி திட்ட வழக்கில் கூடுதல் சாட்சியம் - செப்டம்பர் 17 -ஆம் தேதி விசாரணை

ரோஸ்மா சூரிய மின்சக்தி திட்ட வழக்கில் கூடுதல் சாட்சியம் - செப்டம்பர் 17 -ஆம் தேதி விசாரணை

தொழிலாளர்களுக்கு ஏஐ, டிஜிட்டல் திறன் வளர்க்கும் திட்டத்திற்கு 3.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் ரமணன் அதிரடி அறிவிப்பு

தொழிலாளர்களுக்கு ஏஐ, டிஜிட்டல் திறன் வளர்க்கும் திட்டத்திற்கு 3.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் ரமணன் அதிரடி அறிவிப்பு

நாளை காலை கூடுகிறது பொது மன்னிப்பு வாரியம் - நஜிப் விவகாரம் குறித்து முடிவு

நாளை காலை கூடுகிறது பொது மன்னிப்பு வாரியம் - நஜிப் விவகாரம் குறித்து முடிவு

விமான விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி: மலேசியாவின் புதிய பாதுகாப்புத் திட்டம் அறிமுகம்

விமான விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி: மலேசியாவின் புதிய பாதுகாப்புத் திட்டம் அறிமுகம்

இணைய மோசடிகளைத் தடுக்கும் சிறப்புப் பணிக் குழுவின் பரிந்த... | Thisaigal News